search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டில் ஆஜர்"

    • சந்திரவாணன் மற்றும் சஞ்சய் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • மதியம் 1 மணி அளவில் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் தாழங்குடாவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் கடந்த 27- ந்தேதி தேர்தல் முன்விரோத தகராறு மற்றும் பழிக்கு பழி சம்பவமாக பட்டப்பகலில் கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளை தெருவில் ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.

    இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் மாசிலாமணி, பிரகலாதன், ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோர் சிதம்பரம் மற்றும் பண்ருட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதில் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள சந்திரவாணன் மற்றும் சஞ்சய் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மற்றும் ராமலிங்கம் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கடலூர்2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புதுநகர் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) வனஜா இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து இன்று மதியம் 1 மணி அளவில் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பேரில் ராஜேந்திரன் மற்றும் ராமலிங்கத்தை போலீசார் காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்து இன்று மதியம் 1 மணி அளவில் மீண்டும் கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளனர்.

    • 20 மது பாட்டில்களை பறிமுதல்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் வந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் எஸ்.வி.நகரம் மற்றும் பையூர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்தனமாக மது விற்பனை செய்த எஸ்.வி.நகரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (55), பையூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட 2 பேர் ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க. சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    • ரெயில் நிலையத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க. சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தின் உள்ள குற்ற வியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்க பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, பாமக மாநகர் மாவட்ட தலைவர் ராச ரத்தினம் ஆகி யோர் இன்று ஆஜராயினர்.

    அவர்களுக்கு வக்கீல்கள் குமார், குலசேகரன், விஜய் ராஜா, சுதாகர், கண்ணன், மோகன்ராஜ் ஆகியோர் வாதாடினர். இதை தொடர்ந்து வழக்கு விசா ரணையை வருகிற 30-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • ஆனந்தன் (வயது 45). பிரபல ரவுடியான இவரை கடந்த 5-ந் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
    • இந்த கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் அருகே குள்ளம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). பிரபல ரவுடியான இவரை கடந்த 5-ந் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கு தொடர்பாக, வலசையூரை சேர்ந்த ரவுடி அன்பழகன், கன்னங்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன், பள்ளி பட்டியை சேர்ந்த அஜித் குமார், வெள்ளியம்பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    மேலும் இந்த கொலை தொடர்பாக, வலசையூரை சேர்ந்த சீனிவாசன், வெள்ளியம்பட்டியை சேர்ந்த ராஜா, ஹரி சிவன், இவருடைய தம்பி குழந்தைவேல் ஆகியோரை காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். சரண் அடைந்த மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் சென்னையில் சரண் அடைந்த அன்பழகன், சக்திவேல், மணிகண்டன், அஜித் குமார் ஆகிய 4 பேரையும் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையில் போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில் 4 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

    கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் விசாரணை இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் முடிகிறது. அதன்பிறகு அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

    • சந்திரசேகர் என்பவரது மனைவி மாணிக்கவல்லி (வயது42) இவர்வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களைஅரசு அனுமதி இல்லாமல்விற்பனையில்ஈடுபட்டார்,
    • அவரை கைது செய்துஅவரிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி  சரகம் ஒதியடிகுப்பம் வடக்குத் தெரு, சந்திரசேகர் என்பவரது மனைவி மாணிக்கவல்லி (வயது42)

    இவர்வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களைஅரசு அனுமதி இல்லாமல்விற்பனையில்ஈடுபட்டது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து அவரை கைது செய்துஅவரிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களான, ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு, மாநில வன்னியர் சங்க செயலாளர் பெரியார் சிலைக்கு அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததாக போலீசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கின் விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    சேலம்:

    கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களான, ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு, மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, மாநகர மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ, மாநகர் மாவட்ட தலைவர் கதிர்.ராஜரத்தினம் ஆகியோர் பெரியார் சிலைக்கு அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததாக போலீசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில், இன்று காலை சேலம் ஜெ.எம்.1 கோர்ட்டில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு (தற்போது தி.மு.க.வில் உள்ளார்), மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி ஆகியோர் நீதிபதி கலை

    வாணி முன்பு ஆஜரா னார்கள். மூத்த வழக்கறி ஞர்கள் வக்கீல் விஜயராசா, குமார், கண்ணன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கின் விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

    • பண்ருட்டியில் சாராயம் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சாராயபாக்கெட் களையும்,கஞ்சாபொட்டலங்களையும் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பண்ருட்டி அருகே மனம் தவிழ்ந்த புத்தூர் சுடுகாடு அருகில் சாராய விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சாண்டி(வயது21) என்பவரைகைது செய்தார். பின்னர் அவரிடம் இருந்து ஏராளமான சாராயபாக்கெட் களையும்,கஞ்சாபொட்டலங்களையும் பறிமுதல் செய்து பண்ருட்டி படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டார்.
    • அவரைப் பிடித்து போலீசார் விசாரித்த ேபாது முன்னுக்கு பின் முரனாக கூறினார்.

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து போலீசார் விசாரித்த ேபாது முன்னுக்கு பின் முரனாக கூறினார். இதனால் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பணப்பாக்கத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 30) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

    மேலும், பண்ருட்டி-செஞ்சி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும், தஞ்சாவூர் பகுதியிலும் இவர் வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனிடம் இருந்து செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • வேலை வாங்கி தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்த தம்பதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை ஞானஒளிவுபுரம் விஸ்வாசபுரி 1-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 50). இவரது மனைவி வத்சலா (42).

    இவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.29 லட்சத்து 88 ஆயிரத்து 325-ஐ வாங்கி மோசடி செய்துவிட்டனர். இது குறித்து மகமாயி என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த வழக்கு மதுரை சி.பி.சி.ஐ.டி. பொருளாதார குற்றப்பிரிவு-2க்கு மாற்றப்பட்டது. அவர்கள் தம்பதியை தேடி வந்த போது அவர்கள் இதுநாள் வரை வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர்.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட கோர்ட்டு தேடப்படும் குற்றவாளியாக தம்பதியை அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×